பின்னர், இதுகுறித்து அவர் கூறியதாவது, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சி, வீரப்பன் சத்திரம், பாரதி நகர் பகுதியில், பொதுமக்களை சந்தித்து வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்களிப்பதற்கான வழிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்த விபரங்கள் வாக்காளர் தகவல் சீட்டு கையேட்டில் இடம் பெற்றுள்ளன.
மேலும், தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதியன்று தவறாமல் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதோடு, 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, எஸ்.கே.சி. சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்படுத்தப்படவுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகர பொறியாளர் விஜயகுமார், துணை வட்டாட்சியர் ஜெகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 coment rios: