ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்து வரும் நிலையில் திங்கட்கிழமை (நேற்று) அதிகபட்சமாக 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில் இருந்து, வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், ஏரி, குளங்களில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்து வறண்டு வருகிறது. வன பகுதிகளில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, விவசாய நிலங்களிலும் தண்ணீர் இல்லாததால் தென்னை, மா உள்ளிட்ட மரங்களும் காய்ந்து வர தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்டத்தில் வெயில் அளவு, 104.32 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
நேற்று முன்தினம் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவான நிலையில், நேற்று (1ம் தேதி) திங்கட்கிழமை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 104.72 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தது.
வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்த வரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச் சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
0 coment rios: