ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடங்கி உள்ளதையடுத்து நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (இன்று) காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தினசரி மார்க்கெட் சங்கத் தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் சாதிக் பாஷா மற்றும் சங்க பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகரப் பொருளாளர் சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன் குட்டி (எ) செந்தில்குமார், சந்தானராஜா, முகமது மோசின், ஜியாவுதீன், பாலமுருகன், அருள்ஜோதி, வெள்ளியங்கிரி, முருகேசன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
0 coment rios: