இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து இன்று (7ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் பழைய முருகன் தியேட்டர் அருகில் மாலை 4.30 மணிக்கும், ஈரோடு - பவானி சாலையில் உள்ள பி.பெ. அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் மாலை 5.30 மணிக்கும் நடைபெற உள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச உள்ளார்.
கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞரணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
0 coment rios: