மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படங்கள் உள்பட 96 படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை திரிஷா. இந்நிலையில், திரிஷா மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அகில் பால் - அனஸ்கான் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டையில் நடந்து வருகிறது. மலையாளப் படப்பிடிப்பிற்காக நடிகை திரிஷா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க அவரது வேனுக்கு வெளியே பெரும் கூட்டமாகக் குவிந்தனர். அப்போது, வேனில் இருந்து வெளியே வந்த நடிகை திரிஷா ரசிகர்களை கண்டு கை அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்களும் திரிஷா திரிஷா என சத்தம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா அஜித் குமாரின் விடா முயற்சி, மோகன்லாலின் ராம், கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் சிரஞ்சீவியின் விஸ்வம்பர ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், தற்போது திரிஷா, விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள கில்லி திரைப்படத்தின் ரீ ரிலீஸில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: