5 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா எனப்படும் நிழல் சண்டை பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. கத்தா எனப்படும் கராத்தே தற்காப்பு உத்திகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த வருபவர்களிடமிருந்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் விதம் குறித்தும், சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறித்துச் செல்லும் வழிப்பறி திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் நிழல் சண்டை முறைகள் குறித்தும் மாணவர்கள் கராத்தே பயிற்சிகளின் மூலம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து தகுதியின் அடிப்படையில் வெற்றி பெற்ற காரத்தே வீரர் வீராங்கனைகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கத்திரி, பிரவுன்- 2, பிரவுன்- 1, கருப்பு ஆகிய 8 விதமான பட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மணி, தொழில்நுட்ப இயக்குனர் கீர்த்தி வாசன், துணைச் செயலாளர் பாபு துணைத் தலைவர் யுத்தேஷ், பூர்ணிமாதேவி, காசி விசாலாட்சி உட்பட பெற்றோர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
0 coment rios: