இந்நிகழ்ச்சியில், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் சண்முகவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன், மாநகரச் செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக் பாட்சா, இளைஞரணியை சேர்ந்த ஜியாவுதீன் மற்றும் திரு.மணிகண்டன், கனி சங்கச் செயலாளர் சாதிக் பாட்சா, சங்கத் துணைச் செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டனர்.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் துணிப்பை வழங்கி தேர்தல் விழிப்புணர்வு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கும், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன.
0 coment rios: