சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மோர் பந்தலை தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது தினம்தோறும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் அரசும் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழக முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் பகுதி கழக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சேலம் ஜங்ஷன் மாரியம்மன் கோவில் பகுதியில் நடைபெற்றது இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீ மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி கம்மங்கூழ் கோசாப்பழம் நுங்கு இளநீர் போன்றவற்றை வழங்கினார் அப்போது ஏராளமான முண்டியடித்து கொண்டு நீர் மோர் வாங்க புகுந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் ஜங்ஷன் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர் இதேபோல சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதுமாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் அதிமுக பகுதி கழகநிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
0 coment rios: