ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி, முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது, இந்திய தேசத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இருக்கிறார்.10 ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவர் செய்த திட்டங்களை பட்டியலிட முடியும். மோடிக்கு முட்டுக் கொடுப்பவர் எடப்பாடி. விரோதியும் துரோகியும் இணைந்துள்ளார்கள். இவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்.
2017 பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மோடி பேசும்போது ஒவ்வொருவருக்கும் ரூ 15 லட்சம் வங்கி கணக்கில் போடப்படும் என்றார். இதுவரை தரவில்லை. ஆனால் நம் வங்கி கணக்கில் போட்ட பணம் போதிய இருப்பு என்று கூறி நமது கணக்கில் இருந்த பணமும் பறி போனது. பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறினார். ஆனால் குறைக்கவில்லை. கியாஸ் 420 விலை ரூபாய் இருந்தது இப்போது ஆயிரத்து இருநூறு ஆக உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 36 திட்டங்களை தமிழகத்திற்கு நாங்கள் நிறைவேற்றினோம். செம்மொழியாக தமிழை அறிவித்தோம். ஆனால் மோடி மொழியை அழிக்க முயல்கிறார். முதல்வர் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தோறும் கல்வி, இலவச பேருந்து பயணம், பெண்கள் உரிமை தொகை, நான் முதல்வன், காலை உணவு போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு திட்டங்களை கொடுப்பவர் வேண்டுமா நம்மிடமிருந்து எடுப்பவர் வேண்டுமா நமது வரிப்பணத்தை எடுத்து பீகாரில் செலவழிக்கிறார் பிரதமர் மோடி.
காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதெல்லாம் தேர்தல் வாக்குறுதி இல்லை. தமிழ் மக்களின் நலனுக்காக முதல்வர் அமல்படுத்தி உள்ளார். மோடி ஊழல்வாதிகளே ஒழிப்பேன் என்கிறார் எவ்வளவு பெரிய அவமானம் மிகப்பெரிய குற்றவாளிகள் பாஜக சென்றவுடன் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கு உள்ள பலரை பாஜக பொறுப்பாளர்களாக போட்டுள்ளார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி மக்களுக்கு எதிரான கட்சி இதை வைத்து பாஜகவை தமிழகத்தை கட்டமைக்க போகிறார்களா?.
பாஜக ஆட்சி அம்பானிக்கு அதானிக்குமானது. அதானியின் சொத்து 2260 சதம் உயர்ந்துள்ளது. ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. என மத்திய தணிக்கை துறை சுட்டிக்காட்டி உள்ளது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போனவர்களுக்கு பணம் அனுப்பி உள்ளார்கள் நெடுஞ்சாலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. வெளியே பாஜக ஒரு அணி. அதிமுக ஒரு அணி. ஆனால் ஈரோட்டில் வேட்பாளர் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். பாஜகவுக்கு வாக்களித்தாலோ அதிமுக வாக்களித்தாலோ அவர்களின் முதலாளி மோடி ஒருவர் மட்டும் தான்.
ராகுல் காந்தி ஐந்து திட்டங்கள் அறிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரிகளுக்கும் தாய்மார்களுக்கும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய், அரசு பணியில் 30 லட்சம் இடங்களில் நிரப்புவது, பெண்களுக்கு 50 சதம் இட ஒதுக்கீடு, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித் தருவது, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் பொருள்களுக்கு உடனடியாக தருவது குறித்து சட்டம் இயற்றப்படும் போன்ற அற்புதமான திட்டங்களை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். எனவே இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
0 coment rios: