பின்னர், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு தொகுதியில் 1,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (ஏப்ரல் 20) சட்டமன்றத் தொகுதி வாரியாக பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மற்றும் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றைய தினம் ஈரோடு மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 70.5 சதவீதம் வாக்களிப்பு பதிவாகியுள்ளது. மேலும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தொடர்ந்து கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறையானது மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாள் வரை மத்திய ஆயுதப்படை காவலர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகிறது. சிசிடிவி கேமிராக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அமைக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சுமார் 30 கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு இருப்பறையின் அருகில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை உடனிருந்தனர்.
0 coment rios: