அனைவரையும் மாநகரச் செயலாளர் அ.அந்தோணி யூஜின் வரவேற்று பேசுகிறார். மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் ஆண்டறிக்கையை வாசிக்கிறார். மாவட்டப் பொருளாளர் உதயம் பொ.செல்வம் வரவு செலவு அறிக்கையை வாசிக்கிறார். கோவை மண்டலத் தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறார். மாநிலத் துணைத் தலைவர் ப.திருமூர்த்தி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு மே 5ம் தேதி நடைபெற உள்ள 41வது வணிகர் தினம் மாநில மாநாடு குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் திரளாக பங்கேற்கிறார்கள்.
0 coment rios: