இதற்கான பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிலையில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறியதாவது, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் வளாகத்தில் சிவன் கோவில் அமைப்பதற்கான கட்டுமான பணியும் விரைவில் தொடங்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
0 coment rios: