ஈரோடு சோழீஸ்வரர் ஆலயத்தில் 26 ஆம் தேதி முதல் அதிருத்ர மகாயாகம் தொடங்கும்!!!
*மழை வளம், வேளாண் தொழில் சிறக்க யாகம் நடத்துவதாக தகவல்!!!
ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயிலில் அதிருத்ர மகா யாகப் பெருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காவிரி கரையின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில், வாரணாசி எனப்படும் காசி மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள பசுபதிநாத் திருக்கோயில்களுக்கு இணையானதாக கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகும்.
மக்கள் குறை இல்லாத செல்வம் பெறவும், மழை வளம் பெருகி, வேளாண்மை செழித்திடவும், நாடு சுபிக்ஷம் பெறவும், காவிரியில் குறையாமல் தண்ணீர் பெருகி ஓட வேண்டியும் முந்தைய அரசர் காலங்களில் நடத்தப்பட்ட அதிருத்ர மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கோவில் குருக்களான குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் அருண்குமார் சிவம் குருக்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வேத ஆகம விற்பன்னர்கள் பங்கேற்க உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.இது குறித்து குருமூர்த்தி சிவாச்சாரியார், அருண்குமார் சிவம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிருத்ர யாகம் என்பது சிவபெருமானின் தத்துவங்கள் அவரது குணாதிசயங்கள் பற்றிய பெருமையை பேசுவதும், ருத்ரனின் சமக்கம் மற்றும் அங்கங்களின் பெருமையையும் விளக்கி இந்த யாகத்தில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும். இதன் மூலம் சிவபெருமானின் அனுகிரகம் பெற்று நாட்டில் செல்வம் பெருகவும், மழை வளம் மற்றும் நீர் வளம் பெருகவும் காவேரி ஆற்றில் வற்றாமல் நீர் பெரிய ஓடவும், இதன் மூலம் வேளாண்மை செழித்திடவும், நீலவளம் மேம்படவும், நாடு சுபிட்சம் அடையவும் வேண்டும் என்பதற்காக இந்த அதிருத்ர மகா யாகம் நடத்தப்படுகிறது.
இந்த யாகத்தின் போது 14,641 முறை ஸ்ரீ ருத்ர சிவ மந்திரங்கள் ஜெபிக்கப்படும். மொத்தம் 11 நாட்களுக்கு 1,331 முறை ஸ்ரீ ருத்ர ஹோமம் நடைபெறும்.
பூர்வாங்க ஹோமம், கணபதி ஹோமம், சுப்பிரமணியர் ஆமாம் நவகிரக ஹோமம் சுதர்சன ஹோமங்கள் நடைபெறும். முக்கியமான அதிருத்ர மகாயாகம் வரும் வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறும். இந்த யாகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட வேதாகம விற்பனர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு மாநகரைப் பொருத்தவரையிலும் முதன்முறையாக இந்த மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. காசி சோழீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் நடைபெறும் யாகங்களுக்கு ஒப்பானதாக இந்த யாகம் இருக்கும்.
21 ஆம் தேதி காலை மகா கணபதி பூஜை இடம் தொடங்கிய இந்த யாக விழா வரும் மே 1-ஆம் தேதி 11ஆம் கால மகா யாகத்துடன் நிறைவு பெறும். மே 1ஆம் தேதி யாகம் நிறைவடைந்த பிறகு ருத்ர ஜெபம் செய்யப்பட்டு மகாபூர்ணா ஹுதியுடன் யாத்ராதானமும் செய்து கலசங்களை எடுத்துச் சென்று ஸ்ரீ சோழீஸ்வர பெருமானுக்கு அதிருத்ர மகாயாக கலசா அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்துடன் சோழீஸ்வர பெருமான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருவார்
என்று தெரிவித்தனர்.
யாகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை விழா குழுவின் சுந்தர்ராஜன், ஹரிபாபு, சோமு, தனபால், தேவராஜ், மணி உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
0 coment rios: