இந்நிலையில், தேர்தல் ஆணையம் மூலம் நேற்று மாலை வாக்குப்பதிவு விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமாக 70.59 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. இதில், வாக்களிக்க தகுதி பெற்றிருந்த ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும். பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 87 பேரும் வாக்களித்துள்ளனர். ஆக தொகுதியின் சராசரி படி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள்
ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
0 coment rios: