இந்தியாவில் காங்., ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் முகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம் என்று ஈரோட்டில் பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் பேட்டியளித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கெயில் குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறையில் உள்ள பிரணாவ் திருமண மண்டபத்தில், மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்திக்கு புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், பஞ்சாப் பசவராஜ், கர்நாடகா பி.டி ஜான், கேரளா முத்து விசுவநாதன், ஈசன், அரச்சலூர் செல்வம், ராமசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பெ.மு குழந்தைவேலு, சுபி தளபதி, வெயில் எரிக்காற்று குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கோபால், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன் உட்பட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் என பலர் பங்கேற்றனர்.மறைந்த அ.கணேசமூர்த்திக்கு போல் உங்களை செலுத்தும் விதமாக, பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்ட இந்திய அளவில் பங்கேற்ற விவசாய பெருமக்கள் பேசினர்.
பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கும், விளை நிலங்களுக்கும், கிராமங்களின் முன்னேற்றத்துக்கு ஏதுமில்லை. அவர்களது தேர்தல் அறிக்கை முதலாளி வர்க்கத்துக்கானது. கார்பரேட் நிறுவனங்களுக்கானது. இந்த நாட்டில் தற்போது ஏழைகள், விவசாயிகளிடம் சுரண்டப்படுகிறது. இந்த சுரண்டலே, நாட்டை பலவீனப்படுத்துகிறது.
அவர்களது தேர்தல் அறிக்கை, செயல்பாடுகளை நாமும், ஏழைகள், விவசாயிகளும் எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் நம்மை பற்றி ஏதுவும் குறிப்பிடவில்லை. மற்ற நேரங்களில் நமக்காக உழைப்பதாக ஏமாற்றுகின்றனர். அரசை கையில் வைத்து கொண்ட முதலாளித்துவத்தை நோக்கி முன்னேறுகின்றனர்.
அவர்கள் மக்களையும், தேர்தல் ஆணையத்தையும் மதிப்பதில்லை. அவர்களுடன் மக்கள் இல்லை. தேர்தல் நடத்தை விதிகளை மதிப்பதில்லை. கண்டு கொள்வதுமில்லை. அவர்களுக்கு ஒத்துழைப்பாக மக்கள் இல்லை. அதனால், அவர்கள் தங்களது தேர்தல் பணிகளையும், மக்களை ஏமாற்றும் வேலைகளையும் ஏஜென்சிக்களை வைத்து செய்து வருகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள்.
எனவே நாம் விவசாயிகளின் உண்மை முகத்தை இப்போது வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவில் காங்., ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் முகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள், என நம்புகிறோம். நாட்டின் ஒட்டு மொத்த வரிகளையும் தளர்த்தியும், விலக்கியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என எதிர்பார்க்கிறோம்.
புதிய காங்., அரசு அமைந்தால், அவர்கள் தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிப்பதன் மூலம், விளை பொருட்களின் விலை சீராகும், அப்போது விவசாயிகள் நல்ல பயன் பெறுவார்கள்.
மதரீதியாக பார்த்தால், ராமர் கோவிலுக்கு அனைவரும் செல்வதை வைத்து கொண்டு, பா.ஜ.,வுக்கு அனைவரும் ஆதரவு என்றில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது கோவில் அல்ல. கோவில்கள் அனைவருக்கும் பொதுவானது. ராமர் சிலையை பா.ஜ., அலுவலகத்தில் வைத்து கொண்டால், அது கோவிலாகிவிடாது. ராமர் சிலை பா.ஜ., அலுவலகத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவில்லை.
ராமர் கோவிலுக்கு யாரும் செல்லலாம்; யாரும் வழிபடலாம். அவர்கள் பா.ஜ., ஆதரவாளர்கள் இல்லை என்பதை மக்கள் உணர்த்துவார்கள். தென் இந்தியாவிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன; ஏராளமானவர்கள் வழிபடுகின்றனர். அதற்காக அவர்கள் அனைவரும் பா.ஜ.,வினராகி விட மாட்டார்கள். கோவில் என்பது நமது சொத்து என பேட்டியளித்தார்.
0 coment rios: