சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி......
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்வரும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் செல்வகணபதி அவா்களை ஆதாரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினா் பச்சப்பட்டி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வீதி ரீதியாக நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
சேலம் 40-வது கோட்டத்திற்கு உட்பட்ட பச்சப்பட்டி சாமி தெரு, முத்துசாமி தெரு, மாணிக்கவாசகா் தெரு1, மாணிக்கவாசகா் தெரு 2 மற்றும் குண்டுப்பிள்ளையாா் கோவில் தெரு உள்ளிட்ட பகுதி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்க கேட்டுக்கொண்டு பொதுமக்களின் கால்களில் விழுந்து வாக்குகளை சேகரித்தார்.
இதில் 40.வது டிவிசன் திமுக செயலாளா் தங்கவேலு.காங்கிரஸ் தலைவா் பி.வெங்கடேஷ் MBA.அவா்கள் உள்பட ஏரளாமானோ் கலந்து கொண்டனர்.
0 coment rios: