சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக அமைப்பு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்தியாவில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் தங்கள் ஆதரவுகளை இந்தியா கூட்டணிக்கு செலுத்தி வருகின்றனர்செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒருப்படியாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் ஆன மு க ஸ்டாலின் அவர்களை அமைப்பின் மாநில தலைவர் நாகா ஆர் அரவிந்தன் நேரில் சந்தித்து தங்களது அமைப்பின் ஆதரவை தெரிவித்தார்.
இது சம்பந்தமாக சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை அளிப்பது எனவும் குறிப்பாக தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு அனைத்து மாநிலங்களில் நல வாரியம் உள்ளது போல தமிழகத்திலும் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 10 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆரிய வைசிய சமூக மக்களின் குலதெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் தமிழக அரசின் சலுகைகளை தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு விரைவில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்ததாகவும் மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியினருக்கு அளிப்பது எனவும் தெரிவித்தனர்.
0 coment rios: