திங்கள், 15 ஏப்ரல், 2024

*நகைச்சுவை நடிகர் லட்சுமணன் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர ஓட்டு வேட்டை*

சேலம் சேலம்.
S.K. சுரேஷ்பாபு.


*மாயி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த லட்சுமணன் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர வாக்கு வேட்டை.*



மாயி திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் பேசிய டயலாக் தமிழக மக்களால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அண்ணன் மாயி வந்திருக்காங்க மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காங்க மற்றும் நம் உறவினர்கள் என்ற நகைசுவையாக பேசிய திரைப்பட நகைச்சுவை நடிகா் லட்சுமணன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினா் பச்சப்பட்டி பழனிசாமி அழைப்பை ஏற்று இன்று காலை சேலம் மாநகராட்சியின் நாற்பதாவது கூட்டத்திற்கு உட்பட்ட பச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிறந்தவனே வாகனத்தில் சென்றவாறு திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்குகளை வேட்டையாடினார்.
 

இந்திய கூட்டணி வெற்றி வேட்பாளா் அண்ணன் T.M.செல்கணபதி அவா்களை ஆதாரித்து 40. வது டிவிசன் பச்சப்பட்டி மெயின் ரோடு.பினாங்கு ராமசாமி தெரு.வித்தியாநகா் முதல் கிராஸ்.இரண்டாவது கிராஸ்.ஆட்டோ ஸ்டேன் போன்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பிரசாரத்தில் ஈ.டுப்பட்டாா்.

அப்போது அம்மாப்பேட்டை பகுதி துணை செயலாளா் பெரியசாமி.மகளிா் அணி நிஷா.40.வது டிவிசன் காங்கிரஸ் தலைவா் பி.வெங்கடேஷ் MBA. மற்றும் சூரி உள்பட பலா் கலந்துக் கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: