ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைகாரர் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா… மேலும் மக்களுக்கு முதலமைச்சர் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளையும் எடுத்து கூறி திமுக எம்.பிக்கு வாக்களியுங்கள் என கூறி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு மாநகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...ஜக்கம்மா சொல்ற... ஜக்கம்மா சொல்ற... என பரப்புரை மேற்கொண்டார்.
0 coment rios: