10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் 95.08% பிடித்து ஈரோடு மாவட்டம் மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழகத்தில் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 116 மையத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 24, 826மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 23, 805மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 95.08%மூலம் 7வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் 7வது இடத்தை பிடித்த நிலையில் இந்தாண்டும் அதே இடத்தை பிடித்துள்ளது. இதில் 1,221மாணவ மாணவிகள் தோல்வியடைந்தனர். இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதே போன்று அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பெற்றோரும் தங்களது மகளுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 coment rios: