சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுரங்கத்திலிருந்து தண்ணீரை வீணாக்குவதை தடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
சேலத்தில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மேக்னசைடு எனப்படும் வெள்ளை கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத சுரங்கத்தை மீண்டும் திறக்க நான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட சுரங்கத்தின் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை தேக்கம்பட்டி , மூங்கில்பாடி , வெள்ளை கல்பட்டி , கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.