வெள்ளி, 10 மே, 2024

சேலம் 5-வது கோட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம்... மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் வித்தியாசமான சட்டமன்ற உறுப்பினர்.... பொதுமக்களின் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பாங்கு..

11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது சேலம் மாவட்டம். 
அதிலும் குறிப்பாக மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. 

அந்த வகையில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கி இருந்தாலும், இதில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற பாமக உறுப்பினர் இரா. அருள் சற்று வித்தியாசமானவர் என்றால் அது மிகையாகாது. 

காரணம் அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் தன்னை வந்து சந்திக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் வீடு வீடாக சென்று அவர்களுக்கு என்ன குறை என்ன வேண்டும் என்று மனுக்களாக பெற்று உடனடியாக தீர்த்து கொடுத்து தற்பொழுதும் அந்த பணியை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் சில மேற்கு தொகுதி சட்டமன்ற பாமக உறுப்பினரின் பொதுமக்கள் சந்திப்பு பயணம் இன்று சேலம் மாநகராட்சி ஐந்தாவது கூட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

குறிப்பாக ஐந்தாவது கோட்டத்திற்கு உட்பட்ட சோளி நகர் மற்றும் காளான் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் தனது மக்கள் சந்திப்பு கூடத்தை தொடங்கினார். 

வீடு வீடாக சென்ற அவரிடம் பொதுமக்கள் தாங்கள் இந்த பகுதியில் 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும் போதுமான குடிநீர் வசதி இல்லை சாலை வசதி இல்லை சாக்கடை வசதி இல்லை என்று கூறியதோடு, சாக்கடை வசதி இல்லை என்பதற்காக இங்கு உறிஞ்சிக்கலி அமைக்கப்பட்டு கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் தொற்றுகளுடன் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாகவும், இது தவிர அந்த உறிஞ்சு குழாய்கள் மூலம் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர். 

இதனைக் கேட்டிருந்தேன் சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை அதிகாரிகளுடன் வலியுறுத்திய போது விரைவில் அதை செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். 

இதனை அடுத்து அதே  ஐயர் தோட்டம் பகுதியில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு முறை தான் சட்டமன்ற கூட்டத்தில் பேசியும் எந்தவிதமான நடவடிக்கை இல்லை என்றும்,  இதன் எடுத்து தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்கு சென்று அடிப்படையில் சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலப் பணிகள் நிறைவடைந்து தற்போது பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது, அந்த பாடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மனிதநேயம் கொண்ட சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரின் இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிட்டி வேல்முருகன், ஐந்தாவது டிவிஷன் தலைவர் சுரேஷ்பாலாஜி, டிவிஷன் தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் தினேஷ், துணைத் தலைவர் கோகுல் மற்றும் சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: