கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.ஹேமலதா கேரளா நீலாம்பூர் வனச்சரக அதிகாரி பி.கார்த்திக், வேளாளர் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.ஜெயராமன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜி.ஜவகர் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து, துப்பாக்கியால் குறி தவறாமல் சுட்டும் பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.
விழாவில் கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் கே.கே.சி.பாலு, தாலுகா இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பயிற்சியாளர் எம்.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அகாடமி செயலாளர் எஸ்.தியாகு வரவேற்றார். முடிவில் பொருளாளர் டி.சரவணன் நன்றி கூறினார். இங்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா வசதியும் உள்ளது.
0 coment rios: