ஈரோடு மாநகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து எஸ்.பி. ஜவஹர் உத்தரவின்பேரில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில் குடியிருப்பில் ஒன்றில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70 மூட்டைகள் கொண்ட 1,025 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இத்தொடர்பாக மளிகை கடை நடத்தி வரும் திருப்பதி என்பவரை போலீசார் தேடி வந்தனர் .
இந்நிலையில், ரங்கம்பாளையம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் திருப்பதி உட்பட அவருடன் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது திருப்பதி மேல் ஏற்கனவே குட்கா பொருட்கள் குறித்து வழக்குப்பதிவு இருப்பதுடன் மரப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது ஜீரையர் மூலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி மாணிக்கம் மூலம் விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: