ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். அதனைத் தொடர்ந்து, அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மாதையன் மகன் மதிவாணன்(40), திருச்செங்கோடு சி.எஸ். ஐ. தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் சிவசக்தி(22), திருச்செங்கோடு சின்னாகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் லோகநாதன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் கோபியில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
0 coment rios: