ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 38). இவர் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் வீட்டின் முன் கதவை திறந்து வைத்த நிலையில், குடும்பத்தினருடன் வீட்டில் தூக்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலையில் எழுந்து பீரோவில் உள்ள துணிகளை எடுப்பதற்கு மாதேஸ்வரன் சென்றுள்ளார்.
அப்போது, பீரோவில் இருந்த துணிகள் கலைந்து இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3.85 லட்சம் மதிப்புள்ள 38½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதன்பிறகு, ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: