ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, அரச்சலூர், கந்தசாமிபாளையம், சிவகிரி, கொடுமுடி என ஆறு இடங்களில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கரும்பு சாறு மற்றும் பானக்கங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: