உடனே அவர் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று முள்ளம்பன்றியை விரட்டி வேட்டையாடிக் கொண்டு இருந்ததை நேரில் கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரை கண்டதும், சிறுத்தை கரும்பு தோட்டத்துக்குள் சென்று பதுங்கி கொண்டது.
மேலும், முள்ளம்பன்றியும் அங்கிலிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை தேடினர்.
தொடர்ந்து, அதை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: