இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பர்கூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் துதிக்கையை விட்டு தண்ணீரை குடிக்க தொடங்கியது. இதை கண்டதும் கிராம மக்கள் ஒன்று திரண்டு வாகனங்களின் ஏர்ஹாரன் மூலம் ஒலி எழுப்பியும், கூச்சலிட்டும் யானையை விரட்டும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை எதையும் கண்டு கொள்ளாமல், தொட் டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடித்துவிட்டு அங்கிருந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பர்கூர் அருகே ஊருக்குள் புகுந்து தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற யானை
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதி யில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகு தியை விட்டு காட்டு யானை கள் வெளியேறி கிராமங்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வருவது அடிக்கடி நடக்கிறது.
0 coment rios: