தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் வருகின்ற 3ம் தேதி ஈரோடு சென்னிமலை சாலையில் அமைந்துள்ள என்.எல்., கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமை தாங்குகிறார். மாநகர செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகிக்கிறார். எனவே மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக செயலாளர், நிர்வாகிகள், ஈரோடு தெற்கு, வடக்கு இளைஞர் அணி மாவட்ட, மாநகர ஒன்றிய நகர, பேரூர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: