சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆதரவற்ற மூதாட்டி உயிரிழப்பு.... சடலத்தை மீட்டு மனிதநேயத்துடன் இறுதி சடங்கு செய்த மாமன்ற உறுப்பினர்.
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர், ஆதரவற்ற மூதாட்டி பெத்தாயி. 92 வயதுடைய இவர், இயற்க்கை எய்தினார்.
தன் இறப்பை முன்கூட்டியே கணித்த பெத்தாயி என்கின்ற மூதாட்டி தனது இறுதி சடங்கிற்க்கு 10ஆயிரம் ரூபாயை தனது இறுதி சடங்கிற்காக அருகில் இருந்த இட்லி கடை காரம்மா சாவித்திரி என்பவர் இடம் கொடுத்து கொடுத்து இருந்தார் மூதாட்டி பெத்தாயி.
இது குறித்த தகவல் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வ லிங்கத்திற்கு கிடைத்ததன் அடிப்படையில், அம்மாபேட்டை மணி என்பவருடன் இணைந்து உயிரிழந்த மூதாட்டியின் சலலத்தை மீட்டு சேலம் ஜான்சன் பேட்டை பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு தனது இலவச அமரர் ஊர்தி வாயிலாக கொண்டு சென்றனர்.
பின்னர் இறந்த மூதாட்டிக்கு பிள்ளைகள் யாரும் இல்லை என்ற காரணத்தினால் மனிதநேயத்துடன் பெத்தாயே என்ற 92 வயது மூதாட்டிக்கு தானே இறுதி சடங்கு செய்து எரியூட்டினார் மனித நேயம் கொண்ட மாமன்ற உறுப்பினர்.