ஞாயிறு, 19 மே, 2024

சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய கார்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் அடியில் நீர்வீழ்ச்சி போல் வெளியேறி வரும் மழைநீரில் மூழ்கிய கார் - நுழைவு பாலத்தின் அடியில் காரை விட்டு விட்டு, வேக வேகமாக காரில் இருந்தவர்கள் வெளியேறியதால், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, விஜயமங்கலம் - சென்னிமலை சாலையில் வாய்ப்பாடி என்ற இடத்தில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. 
இன்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், ரயில்வே பாலத்தின் பக்கவாட்டு சுற்றிலிருந்து நீர் வீழ்ச்சியை போல் கனிசமான மழைநீர் வெறியேறி வருகிறது, 

இதனால் ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த நுழைவு பாலத்தின் அருகே உள்ள பகுதிகளிலிருந்து மழைநீரும் இங்கு வந்து சேர்ந்தது.  இதனால், ரயில்வே நுழைவு பாலத்தில் 10 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், கவுண்டம்பாளையத்தில் இருந்து சென்னிமலை நோக்கி கார் ஒன்று இந்த ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக சென்றது. அப்போது அங்கு அதிகமாக தேங்கி நின்ற மழை நீரால் கார் பழுதாகி நின்றது. 

இதனையடுத்து, நீரின் அளவு அதிகமானதால் காரில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு வெளியேறியதால், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதேபோல், அந்த வழியாக வந்த டாரஸ் லாரியும் நுழைவு பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரில் சிக்கி பழுதானது‌. இதுபற்றி அறிந்ததும், சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். பின்னர், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் டாரஸ் லாரியை மீட்டனர். 

தொடர்ந்து, நுழைவு பாலத்தின் நடுப்பகுதியில் 10 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், தற்போது மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தண்ணீர் வெளியேற்ற பின்னரே தண்ணீருக்குள் சிக்கியுள்ள மாருதி 800 காரை மீட்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: