இதனைக் கண்ட வனத்துறையினர் தாளவாடி வனச்சரகர் சிவகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் சிவகுமார் யானையின் உடலை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் யானையை வேட்டையாடி தந்தத்தை வெட்டிச் சென்ற கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டியை சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த யானைத்தந்தத்தை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த சில குற்றவாளிகளையும் தாளவாடி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
0 coment rios: