ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன.இந்த யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனபகுதியில் வரட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் கிடைக்காமல் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், சாலையில் உலா வந்து வாகனங்களை துரத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோட்டாடை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளி தடுப்புச் சுவரை உடைத்து எரிந்து பள்ளி வளாகத்துக்குள் காட்டு யானை ஒன்று உலா வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன்பிறகு கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
0 coment rios: