ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது... தமிழர்களின் பாரம்பரிய பறை இசை, நாதஸ்வரம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 11 -ஆம் தேதி தொடங்கியது.
இன்று வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்வு காலை முதல் நடைபெற்றது. இதையொட்டி, விருஷப யாகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், வாருணாம்பிகை உடனமா் சோமாஸ்கந்தா் இந்திர விமான வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின், முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோடட்டம் இன்று வெகு விமர்சையாக நடை பெற்று வருகிறது, துணை மேயர் செல்வராஜ், இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், செயல் அலுவலர் கயல்விழி, கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர் செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் இன்று மாலை கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
21ஆம் தேதி மாலை 5 : 30 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடும், 22- ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளது.
0 coment rios: