ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுரையின்படியும், அதிக வெப்பத்தால் பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் பெருந்துறையில் செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் மூன்று மாம்பழ குடோன்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது ஒரு குடோனில் எத்திரால் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட ரூ.5,000 மதிப்புள்ள 80 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.ஒரு பழக்கடையில் ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த தரம் குறைவான மற்றும் கெட்டுப்போன மாம்பழம் ஆப்பிள் பப்பாளி பழங்கள் சுமார் 10 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இயற்கையான முறையில் மாம்பழம் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தரமான பழ வகைகளை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட கேரி பேக் பயன்படுத்தக்கூடாது எனவும் பழக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்ததுடன் ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்த கடை உரிமையாளருக்கு ரூ.2,000மும் கெட்டுப்போன பழங்களை ஜூஸ் போட வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1,000மும் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக ஐந்துக்கும் மேற்பட்ட சிக்கன் மற்றும் சவர்மா விற்பனை கடைகளில் மேற்கொண்ட ஆய்வின்போது ஒரு கடையில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளருக்கு ரூபாய் 1,000அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தரம் குறைவான உணவு பொருள் விற்பனை செய்வது மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணை தொடர்பு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
0 coment rios: