ஈரோடு திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 1-ந் தேதி தனது மொபட்டில் சக்தி நகரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது சிவன் நகர் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசிரியை பரிமளா கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்ட மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பவளத்தாம் பாளையத்தில் தாலுகா போலீசார் இரவு நேரத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (26), திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த ஜனா என்கிற ஜனகராஜ் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் இணைந்து ஆசிரியை பரிமளாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு பவுன் நகையையும், 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 coment rios: