ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 99 தனியார் பள்ளிகளில் பயன்படுத்தபடும் 980 வானங்கள் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஈரோடு கிழக்கு ,ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 99 தனியார் பள்ளிகளை சேர்ந்த 980 வாகனங்கள் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட ரமணி தலைமையில் நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ராஜாகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் உட்படுத்திய வாகனங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமிரா, வேக கட்டுப்பாட்டு கருவி , தீ அணைப்பு உபகரணங்கள் , முதலுதவி உபகரணங்கள் மற்றும் அவசர கால கதவுகள் வேலை செய்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்றது. மேலும் கலந்து கொண்ட பள்ளிகளை சேர்ந்த ஓட்டுநர்களுக்கு ஆபத்து காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்களை மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இந்த ஆய்வில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவத்து அலுவலர் வெங்கட்ட ரமணி, ஈரோடு மேற்கு அலுவலக அலுவலர் பதுமைநாதன், பெருந்துறை அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் ஐந்து குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர்.
0 coment rios: