ஞாயிறு, 26 மே, 2024

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் பணிகள்: விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2.07 ஏக்கர் விளைநிலங்கள் பாசனத்திற்காக கீழ்பவானி பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்த கால்வாய் சீரமைப்பதற்காக 710 கோடி ரூபாய் கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பணிக்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இப்பணிகளை முடிப்பதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் என்பது முழுமையாக மண்ணால் ஆன கூடிய கால்வாயாக இருக்க கூடிய நிலையில், கால்வாயில் கான்கிரீட் அமைத்தால் முழுமையாக கசிவு நீர் பாதிக்கப்படும். இதனால், கசிவு நீரை நம்பி இருக்கக்கூடிய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும், கசிவு நீர் பாதிக்கப்படும் இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

தற்போது, கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியில் கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தன‌. இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டனர் . மேலும், அங்கு கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கனகபுரத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறுகையில், 80 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது இல்லை. கால்வாயில் கரையை பலப்படுத்துவதாக கூறி இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டி விட்டனர். இந்த கான்கிரீட் தளம் அமைத்தால், கால்வாயின் கசிவு நீரை நம்பி இருக்கும் 10 குளங்கள், 7 கிராமங்கள் குடிநீர் இன்றி பாதிக்கப்படும். எனவே, அரசு இதில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: