தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, இடத்தில், சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை கோர்ட் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அந்தியூர் அருகே எண்ணமங்கலம், குரும்பபாளையம் மேடு பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவினை இப்பகுதியினர் ஆக்கரமிப்பு செய்து, விவசாயம் செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து பொதுப்பணித்துறையினர், அந்தியூர் வருவாய்த்துறையினர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கரமிப்பு செய்துள்ள நீர்நிலை புறம்போக்கினை அதிகாரிகள் மீட்டனர்.
0 coment rios: