இந்த ஆய்வின் போது, சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவன் நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.32.82 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், சத்தியமங்கலம் கூத்தனூர்சாலை பரிசல்துறை வீதி ரங்கசமுத்திரம் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணியினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வாரச்சந்தை பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பக்கவாட்டுச்சுவர் கட்டப்பட்டு வருவதையும், வ.உ.சி வீதியில் 35.13 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர்கள் செல்வம் (சத்தியமங்கலம்), முஹமது சம்சுதீன் (புஞ்சை புளியம்பட்டி) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: