வெள்ளி, 24 மே, 2024

கேரளா அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: பாஜக கிசான் மாநில செயலாளர் வேண்டுகோள்

இதுதொடர்பாக பாஜக கிசான் மாநிலச் செயலாளர் எஸ்.ஆர். சுப்ரமணியம் கூறியுள்ளதாவது:-

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு, 2018 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றிற்கு மாறாக,கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் அதற்கு மாறாக முயற்சிகளை மேற்கொள்கிறது.

தற்போது காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மீறி, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் உள்ள
"பெருகுடாவிவில்"கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால் தமிழக அமராவதி அணைக்கு இயற்கையாக வருகின்ற நீரின் வரத்து குறைந்து ,தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் அரசு "மேகதாது" என்ற அணையைக் கட்ட உள்ளது.தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இதை முழுமையாக கையாளத் தெரியாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

சிபிஎம், காங்கிரஸ் ஆகியவை தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுகவின் நம்பிக்கையான தோழமைக் கட்சிகள். இப்படியிருந்தும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை திமுக அரசால் எதனால் தடுக்க முடியவில்லை! இனியாவது தமிழ்நாடு அரசு கண் விழித்து கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: