ஈரோடு ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வட மாநில இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்த மதுவிலக்கு போலீசார் இவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொடர்ச்சியாக ஈரோட்டுக்கு ரெயிலில் கஞ்சாவை கடத்தி வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் சென்னையில் இருந்து ஈரோடு வந்த குறிப்பிட்ட அந்த ரெயிலில் சேலத்தில் ஏறி, குறிப்பிட்ட அந்த வாலிபரை கண்காணித்து பின் தொடர்ந்து வந்தனர்.
மேலும், அவர் யாரிடம் கஞ்சாவை கொடுக்கிறார்? யார்? யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பதை கண்டறிய, ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெளியிலும், மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ரெயிலில் வந்த வாலிபர் ஈரோடு ரயில் நிலையம் வந்ததும், ரெயிலை விட்டு இறங்கி, ஈரோடு ரெயில் நிலையம் வெளியில் வந்தார்.
தான் கொண்டு வந்த பையை மற்றொரு வாலிபரிடம் கொடுத்தார், அப்போது, சேலத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்த போலீசாரும், ரெயில் நிலையத்துக்கு வெளியில் காத்திருந்த போலீசாரும் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் ஒடிசா மா நிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (32) என்பதும், அடிக்கடி ஈரோடு வந்து செல்லும் அவர் அங்கிருந்து ரெயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து, ஈரோட்டில் விற்பனைக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
ஈரோட்டில், மனோஜ்குமாரிடம் கஞ்சாவை வாங்கிச் செல்ல வந்திருந்தவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அமான்குமார் (27) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது,
அமான்குமார் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் மனோஜ் குமார் அவ்வப்போது வந்து கஞ்சா கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்களிடமிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் மதுவிலக்கு போய் சார் கைது செய்தனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மனோஜ்குமார் மீது ஈரோடு மாவட்டம், பெருந்துறை போலீசில் ஏற்கனவே கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, ஈரோடு ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கி இருக்கும் வட மாநில மாவட்டத்தில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
0 coment rios: