சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மரண படுக்கையில் தவிக்கும் 400 ஏழை குடும்பங்கள். சம்பந்தப்பட்ட கல் குவாரிகளை மூட.. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
சேலம் மாவட்டம்- காடையாம்பட்டி வட்டம்- வேப்பிலை பஞ்சாயத்து- மங்கனிக்காடு மற்றும் தட்ராவூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்புடன் சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தா தேவியை சந்தித்து தங்களது பகுதியில் நிலவும் அரசுக்கு எதிரான விதிமீறல்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர்கள் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசு ராம் ரவி தலைமையில் வழங்கப்பட்ட அந்த மனுவில், தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கண்ட சம்பந்தப்பட்ட கிராம பகுதிகளில் மரண பயத்தில் வாழ்ந்து வரும் ஊர் கிராம மக்கள். இந்த குக்கிராமத்தை சுற்றி அடர்ந்த குன்றுகள் நிறைந்தது. கடந்த நூறு ஆண்டுகளாக வன பகுதியாக பாவிக்கபட்டு தமிழக அரசின் வன பாதுகாப்பு திட்டத்தில் பல லட்சம் மரங்கள் நடபட்டு தற்சமயம் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.
இந்த மலை வன பகுதியின் அடிவாரத்தில் அமையபட்ட தாட்ராவூர் சிறு கிராமம். தற்சமயம் 200 ஏழை , குறு விவசாயிகள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்க பெறாமல் வாழ்ந்து வருகின்றனர். தூய்மையான குடிநீர் இல்லை. அடிப்படை சுகாதார வசதிகள் நிறைவேற்றாத வேப்பிலை பஞ்சாய்த்து. பணியாள் இல்லாத பூட்டி நிலையில் சுகாதார கட்டிடம் பெயரளவில்.
பஞ்சாயத்து பள்ளி வளாகம் தூய்மையற்ற நிலையில்.
இந்த தாட்ராவூர் கிராம மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. சிறு விவசாய நிலங்கள் பாழடைந்த நிலையில். ஆடு மாடுகள் குடிப்பதற்கு கூட நீர் இல்லை அனைத்தும் மாசு படிந்துள்ளது.
தினம் பொது மக்கள் உண்டும் உணவில் கல்லும், மண்ணும் மாசு கலந்தவையாக. பல உயிர்கள் காரணம் தெரியாமல் மருத்துவ குளருபடியால் மாய்ந்து போனது. இதே நிலை தான் வன குன்றுகளுக்கு மேற் பரப்பில் அமைய பெற்ற மாங்கனிக்காடு குற் கிராமம். இந்த கிராம அப்பாவி மக்களுக்கும் மேற் சொன்ன அனைத்து துயரங்களும், பாதுகாப்பற்ற உறைவிடங்கள். இந்த இரு கிராம வன பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் பஞ்சாயத்து நிதிகள் பயன்படுத்தபடாமல் வரட்ச்சியாகவே உள்ளது. இந்த 400 ஊர் பொது மக்களின் மரண படுக்கையில் தூங்க சென்று மரண பயத்தில் தினம் விடியல் நடக்கிறது. விடிய விடிய இரவு நேரத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கின்றது.
கிராம மக்களின் எந்த கோரிக்கைகளையும் கவனிக்க
மறுக்கும், பாதுகாப்பு கொடுக்க மறுக்கும் கிராம நிர்வாக
அலுவலர் (VAO)- வருவாய் ஆய்வாளர்- மற்றும் ஆகியோர் கல்குவாரி முதலாளிகளுக்கு
ஆதரவு கொடுப்பதும் பாதிக்கப்பட்ட கிராம மக்களை ஊரை விட்டு காலி செய்யுங்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
400 க்கும் மேற்பட்ட ஊர் கிராம மக்களுக்கு பணியாற்
அரசு அதிகாரிகளா? ஒரு குவாரி முதலாளிக்கு ஆதரவு
அளிப்பது அதிகாரிகளின் வேலையா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
குவாரி அதிபர்கள் ராஜா மற்றும் செல்வம் ஆகியோர், அவர்களது
கூட்டாளிகள் இந்த சட்டத்திற்கு புறம்பான குவாரிகளை மூட வலியுறுத்தும் கிராம
இளைஞர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும், வழக்கு பதிய தீவட்டிபட்டி காவல் துறையின் உதவியை நாடி வருவதற்கு சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் வன்மையாக கண்டிப்பதாகவும்
அந்த மனதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர் பொதுமக்களுக்கு பாதுகாப்பற் கல் குவாரியை தடை செய்ய வேண்டும், கல் உடைக்கும்
பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக
அரசையும், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும்
வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் இந்த புகார் மனுவினை அளிக்கின்றோம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 coment rios: