ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் நேருவின் 60வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர்.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் மாமரத்துபாளையம் கோபி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாமன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட துணை தலைவருமான கே.புனிதன் நேருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி சி டி யு) மாநில துணைத்தலைவர் குளம் எம்.ராஜேந்திரன், ஐ என் டி யு சி மாநில பொருளாளர் என் துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் சி. பாஸ்கர்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்களான இரா கனகராஜன், கராத்தே யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம் ஜூபைர் அகமது, துணைத்தலைவர் கே என் பாஷா உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.
0 coment rios: