நாங்குநேரியில் அரசு பேருந்து நடத்துனர் - ஆயுதப்படை போலீஸ் இடையே நடந்த வார்த்தை சண்டை, தமிழ்நாட்டின் 2 பெரிய துறைகளுக்கான பிரச்சினையாக மாற இருந்த நிலையில் தவிர்க்கப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் காவல் துறையினர் தங்கள் மாவட்டங்களுக்குள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக காவல்துறையில் சுமார் 1 லட்சம் போலீசார் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண் போலீசார். பிற போலீசார் சொந்தமாக 2 சக்கர வாகனங்கள் வைத்து பணிக்கு செல்வார்கள். பணியின் நிமித்தம் செல்லும்போது 'வாரண்ட்' பெற்று பஸ்களில் செல்கிறார்கள். எனவே தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டும் போலீசார் அரசு பேருந்து பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
எனவே, போலீசாரின் சமுதாய பணியை கருத்தில் கொண்டு அரசு பேருந்தில் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் போலீசார் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: