செவ்வாய், 28 மே, 2024

சேலத்தில் உருவாகும் உண்மை சம்பவத்தை தொடர்பு கொண்ட திரைப்படம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம்- காடையாம்பட்டி வட்டம்- வேப்பிலை பஞ்சாயத்து-  மங்கனிக்காடு மற்றும் தட்ராவூர் சுமார் 400க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர். இதனிடையே பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் போல ஆவணங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருகிறது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள் போலியாவனும் தயாரித்தவர்களுக்கு துணை போகின்றார்களே தவிர கிராம மக்களின் துயரத்தை துடைக்க தற்பொழுது வரை முன்வரவில்லை. 

இதனால் அந்த கிராம மக்கள் படும் துயரம் சொல்லி மாலாது. சம்பந்தப்பட்ட பகுதி கிராம 400 குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் மரணப் படுக்கையில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. 

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் சேலம் மாவட்ட ஆட்சியர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர்,  சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் என பலரிடமும் புகார் தெரிவிக்கும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. 

இந்த சூழலில்,


*உறங்காத இரவுகள்.* என்ற பெயரில் திரை படம்  உண்மை கதையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வினர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதை இயக்கம் ஆகியவற்றை  மேற்கொள்ளும் இயக்குனரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளருமான சரசுராம் ரவி, நம்முடைய கூறுகையில்,
வேப்பிலை கிராமம் கதை சூழல்.

குவாரிகளால் பொது மக்கள் படும் அவதிகள்..

மாசு கட்டுபாடு துறை அவலட்சனம்.

வன துறை அலச்சியம்

வருவாய் மாவட்ட நிர்வாக சீர்கேடுகள் ..


 நடிகர்கள் தேர்வு நான்+ நீ+ ஆனந்த்+  கிராம மக்கள்+ குவாரி ஓனர்ஸ்( வில்லன்) + போலீஸ்+ வருவாய் நிர்வாகம்...+ தங்கமணி+ இளைஞர்கள்+ 


கதை:

ஓபனிங் சாட்....

டாமால்..டுமீல்.. வெடிகள்  பாறைகளை  பிளந்து ... கற்கள் வின்னில் பறந்து விழும் காட்சிகள்..

20 லாரிகள்.. இரவு ... நிலா ஒளியில் கற்களை ஏற்றி கொண்டு தட்ராவூர்.. மாங்கனிகாடு பகுதியை கடந்து ஓடுகிறது..


அச்சத்தில் குடிசைகளில் ஒண்டி , சுருண்டு படுத்திருக்கும் கிராம மக்கள்...


சில வீடுகளின் மேல் விழம். காறை கற்கள ... அலறி ஓடும் குடிசை வாழ் மக்கள்.

அடுத்த தாள்:

கிராம அதிகாரி அலுவலகம்.

Vao  மக்களை பார்த்து பேசும் திமிரான பேச்சு...

மக்கள் குமுறல்..


வட்டாச்சியர் பானு சந்திப்பு.
.அலச்சிய பதில்..


மாவட்ட ஆட்சியர் சந்திப்பு  முயற்சி ... பலன் இல்லை.


கூட்டு நடவடிக்கை குழ தலைவரை சந்திப்பு...

சரஸ்ராம் தலைமையில் உண்மை அறியும் குழ கிராமத்தை நோக்கி பயணம்...


 கிராம மக்களிடம் நேரடி விசாரணை...


இளைஞர்கள் , பெண்கள் கண்ணீர் மல்க வேதணை கொட்டி தீர்ப்பு....

பத்திரிக்கையாளர்கள் கூட்டம்...


ஊடகங்களில் மக்களின் கோரிக்கைகள் பதிவு... தொலைகாட்சி செய்திகள்...

குவாரி முதலாளிகளின் அச்சுறுத்தல்கள்...


மக்கள் பயம் இளைஞர்கள் மீது பொய் புகார்கள்.் காவல் முறை மிரட்டல்கள்

மக்கள் திரள் போராட்டம் அறிவிப்பு.
.

ஒரு புறம் குவாரியை நிறுத்திட  சட்ட போராட்டம்.. வழக்கை உயர் நீதி மன்றத்தில் பதிவு


மறுபுறம் உண்ணாவிரத போராட்டம்...

வருவாய் துறை குவாரியை நிறுத்தியதா ?

காவல் துறை மக்களின் மீதான நெருக்கடி, அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தியதா ? 


குவாரி முதலாளிகளின் அரசியல் செல்வாக்கு பண பலம் வென்றதா ?

மக்களின் ஒற்றுமை வென்றதா ?


கிளைமாக்ஸ்.....

50 காட்சிகள்  கொண்ட திரைபடம்  என்று அந்த திரைப்படத்தை இயக்கப் போகும் 
சரஸ்ராம்ரவி தெரிவித்துள்ளார். 
முதற்கட்டமாக

வசனம்
சுரேஷ்

கேமிரா
சங்கர்! முரளி+ ஆனந்த்

இசை
யுவன்சங்கர் உள்ளிட்டோ தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,

நடிகர்கள்:

தேர்வு விரைவில் நடத்தப்பட்டு, குறுகிய காலத்தில் படம் தயாரிக்கப்பட்டு ஆவணப்படமாக வெளியிடப்பட உள்ளதாகவும் சரசுராம் ரவி தெரிவித்துள்ளார். 
அத்திப்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாகவும் அங்கு பொறுப்பில் இருந்த உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து அந்த கிராமத்தையே ஒழித்துக் கட்டியதாக திரைப்படத்தின் வாயிலாக பார்த்திருக்கிறோம் ஆனால் சேலம் மாவட்டத்திற்கு மிக அருகே அதே போன்று ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட கிராம மக்களை காப்பாற்ற இந்த திரைப்படம் வந்த பிறகாவது தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்குமா ?.
பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் திரைப்பட குழுவினருடன் நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: