இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப்பகுதியில் இன்று (மே.15) புதன்கிழமை மதியம் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆசனூா் - திம்பம் சாலையில் 2க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து, சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களை வனத்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 coment rios: