இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (2024 Maruti Suzuki Swift) கார், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது களமிறக்கப்பட்டிருப்பது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை (Fourth Generation) மாடல் ஆகும்.
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 80 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 112 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் இதே இன்ஜினில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனை வழங்கவுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, மைலேஜ் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.
0 coment rios: