இந்நிலையில், நேற்று மாலை மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தாயார் சசிகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், உடனடியாக வெள்ளோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளோடு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சசிகலாவின் சடலத்தை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயகுமாரை மீட்ட காவல்துறையினர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் முதல் கட்ட தகவலில், விஜயகுமாரின் தம்பியான, சின்னத்தம்பி (வயது 39) என்பவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. தனது தம்பிக்கு திருமணமான நிலையில், 42 வயதான தனக்கு இன்னும் திருமணமாகாத விரக்தியில் இருந்துள்ளார்.
இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்காத தாயை, மது அருந்திவிட்டு வந்து குடிபோதையில் கொலை செய்து விட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாக கூறினர்.
0 coment rios: